12 வருடங்களுக்கு பின் மலரும் பூ : ஆவலுடன் காத்திருக்கும் மக்கள்!

Report Print Thirumal Thirumal in சிறப்பு
271Shares

தலவாக்கலை - ஹேமசந்திரா மாவத்தை பகுதியில் இரவு 12 மணிக்கு மலரும் பூ அதிகாலை சூரியன் வெளிச்சத்திற்கு முன்பாக மறைந்து விடும் அதிசயம் நிகழ்ந்துள்ளது.

இப்பகுதியில் வசிக்கும் டி.மீதுபுல என்பவரின் வீட்டின் முன்புறத்தில் வளர்க்கப்படும் கடும்புல் பூஞ்செடியில் 12 வருடங்களுக்கு பின் இந்த பூ நேற்று மலர்ந்துள்ளது.

இப்பூ இரவு 12 மணியளவில் மலர்ந்து சூரியன் உதிப்பதிற்கு முன்பதாக மறைந்துவிடுவதாக கூறப்பட்டுள்ளது.

இந்த அதிசயமான மலரை பார்ப்பதற்காக இப்பிரதேசத்தில் உள்ள அதிகமானவர்கள் அந்த வீட்டுக்கு சென்றவண்ணமே உள்ளனர்.

வீட்டின் உறவினர்கள் மற்றும் சிலர் இரவுவேளை வரை தங்கியிருந்து இந்த அதிசயத்தினை பார்க்க ஆவலுடன் இருக்கின்றமையும் குறிப்பிடதக்கது.

Comments