சூடுபிடிக்கும் ரவிராஜ் படுகொலை வழக்கு...! நிராகரிக்கப்பட்ட நகல் பத்திரத்திற்கு எதிராக நகத்தல் பத்திரம் தாக்கல்..!

Report Print Murali Murali in சிறப்பு
198Shares

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜ் படுகொலை வழக்கு தொடர்பில் தாக்கல் செய்யப்பட்டிருந்த மேன்முறையீடு இன்று தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், தள்ளுபடி செய்த மேன்முறையீட்டுக்கு எதிராக மீண்டும் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக பிரதிவாதிகள் தரப்பினர் தகவல் தெரிவித்துள்ளனர்.

கடந்த 2006ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 9ஆம் திகதி கொழும்பு நாரஹன்பிட்டி பகுதியில் வைத்து முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜ் படுகொலை செய்யப்பட்டிருந்தார்.

இந்த படுகொலை தொடர்பில், 2016ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 22ஆம் திகதி விசேட ஜூரிகள் நியமிக்கப்பட்டு, 23ஆம் திகதியிலிருந்து 22 நாட்கள் சாட்சியங்கள் பதிவு செய்யப்பட்டன.

குறித்த வழக்கின் தீர்ப்பு ஜுரிகள் பரிந்துரைக்கமைவாக கொழும்பு மேல் நீதிமன்ற கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 24ஆம் திகதி தீர்ப்பு வழங்கியிருந்தது.

அதன் அடிப்படையில், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜ் கொலை வழக்கில் குற்றம் சுமத்தப்பட்ட அனைவரும் விடுதலை செய்யப்பட்டிருந்தனர்.

எனினும், ஜுரிகள் சபையினால் வழங்கப்பட்ட தீர்ப்பினை எதிர்த்து ரவிராஜின் மனைவி மேன்முறையீடு செய்திருந்தார். இந்த மேன்முறையீட்டு மனுவை பரிசீலனை செய்த மேன்முறையீட்டு நீதிமன்றம் மனுவை தள்ளுபடி செய்துள்ளது.

இந்நிலையிலேயே, மேன்முறையீடு தள்ளுபடி செய்தமைக்கு எதிராக மீண்டும் மேன்முறையீடு செய்யப்பட்டுள்ளதாக பிரதிவாதிகள் தரப்பினர் தெரிவித்துள்ளனர்.

Comments