தயார் நிலையில் துணை இராணுவப்படை..! தமிழகத்தில் நாளை நடக்க போவது என்ன..?

Report Print Murali Murali in சிறப்பு
2867Shares

தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டு போட்டியான ஜல்லிக்கட்டுக்கு விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்க வேண்டும் என வலியுறுத்தி கடந்த சில நாட்களாக தமிழகத்தில் பாரிய போராட்டம் வெடித்துள்ளது.

இந்த போராட்டம் காரணமாக ஒட்டு மொத்த இந்தியாவின் பார்வையும் தமிழகம் பக்கம் திரும்பியுள்ளது. அத்துடன், தமிழகத்தில் முன்னெடுக்கப்பட்டுள்ள போராட்டத்திற்கு ஆதரவாக தமிழர்கள் வாழும் நாடுகளிலும் போராட்டம் வெடித்துள்ளது.

ஆரம்பத்தில் சாதாரணமாக ஆரம்பிக்கப்பட்ட இந்த போராட்டம் தற்போது வீரியம் கொண்டு மாபெரும் எழுச்சி போராட்டமாக வெடித்துள்ளது. இதன் காரணமாக முழு தமிழகமே ஸ்தம்பித்து போயுள்ளது.

போராட்டத்தை கட்டுப்படுத்த முடியாமல் தமிழக பொலிஸார் விழிபிதுங்கி போயுள்ளார்கள் என்றே கூறவேண்டும். இந்நிலையில் துணை இராணுவப்படையினரை கொண்டு போராட்டத்தை கட்டுப்படுத்த மத்திய அரசு தயாராகி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

தீவிரமடைந்த போராட்டத்தின் நிலையை கருத்தில் கொண்டு, பாரத பிரதமரை நேரில் சந்தித்து, ஜல்லிக்கட்டு விவகாரம் குறித்து தமிழக முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பேச்சுவார்த்தை நடத்தியிருந்தார்.

எனினும், இந்த பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது என்றே கூறவேண்டும். "ஜல்லிக்கட்டு விவகாரத்தில் மத்திய அரசு எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாது. அதே நேரம் தமிழக அரசு எடுக்கும் நடவடிக்கைக்கு மத்திய அரசு உதவும்" என்று பாரத பிரதமர் தெரிவித்துள்ளார்.

மத்திய அரசாங்கம் கைவிரித்ததை தொடர்ந்து ஜல்லிக்கட்டு போட்டிக்கு விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்குவது தொடர்பில் சட்ட ஆலோசணையில் தமிழக முதலமைச்சர் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதற்காக இன்று சென்னை திரும்ப வேண்டிய அவர், டெல்லியில் முகாமிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இது இவ்வாறு இருக்க, மத்திய அரசு கைவிரித்ததை தொடர்ந்து போராட்டம் மேலும் ஒருபடி தீவிரம் பெற்றுள்ளது.

இது நாள் வரையிலும், மைதானங்களிலும், வீதியோரங்களிலும் இடம்பெற்று வந்த இந்த போராட்டம் மத்திய அரசின் கட்டுப்பாட்டியில் உள்ள ரயில் நிலையங்களில் தங்களின் போராட்டங்களை ஆரம்பித்துள்ளனர்.

அங்கு அங்கு ரயில் மறியல் போராட்டத்தில் ஆர்ப்பாட்டகாரர்கள் ஈடுபட்டதை தொடர்ந்து, மத்திய அரசு, தற்போது களத்தில் இறங்கத் தயாராகிவிட்டதாக அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஜல்லிக்கட்டுக்கு விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்க கோரி முன்னெடுக்கப்பட்டுள்ள போராட்டம் குறித்து, மத்திய உளவுத் துறை, தொடர்ந்து மத்திய அரசுக்கு குறிப்புகள் அனுப்பிவருகின்றன.

அதில் "தமிழக பொலிஸ் போராட்டத்தை கட்டுப்படுத்தாமல், அதற்கு பாதுகாப்பாக இருக்கின்றது" என சுட்டிக்காட்டப்பட்டுள்ளதாக தமிழக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்நிலையில், தமிழகத்தில் இருக்கும் துணை இராணுவப்படையினரை கொண்டு போராட்டத்தை கட்டுப்படுத்த மத்திய அரசு தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதற்காக தமிழகத்தில் இருக்க கூடிய துணை இராணுவ நிலையங்களுக்கு டெல்லியில் இருந்து இன்று காலை உத்தரவு ஒன்று வந்துள்ளதுள்ளதாக தமிழக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு மோசமாகிவிட்டது. தமிழகத்தில் மத்திய அரசு ஊழியர்களுக்கு பாதுகாப்பில்லை. அசாதாரணச் சூழ்நிலை நிலவுகிறது என மத்திய அரசு அறிவித்ததுடன், துணை ராணுவத்தையும் போராட்டக்களத்தில் இறக்கி போராட்டத்தை கட்டுப்படுத்த திட்டம் தீட்டப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பிரதமரின் சந்திப்புக்கு பின்னர் போராட்டத்தின் வீரியம் குறைந்து விடும் என எண்ணியிருந்த நிலையில், "முடிவு தெரியாமல் போராட்டத்தை கைவிடப்போவதில்லை என ஆரப்பாட்டக்காரர்கள் குறிப்பிட்டுள்ளார்கள்.

எனவே, அந்த நிலை நாளை காலை வரை தொடர்ந்தும் நீடித்தால் மத்தியதுணை இராணுவப் படை தமிழகத்துக்குள் நுழைந்துவிடும் எனவும், இது குறித்து அதிகாரிகள் மத்தியில் அச்சம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Comments