பிரான்சில் திட்டமிடப்பட்டதாக சுமந்திரன் படுகொலை சதி..! பின்னணியில் செயற்படுவோர் யார்..?

Report Print Murali Murali in சிறப்பு
1141Shares

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனை படுகொலை செய்வதற்கான சதித்திட்டம் பிரான்சில் திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இது தொடர்பிலான விசாரணைகளின் போது இந்த விடயம் கண்டறியப்பட்டுள்ளதாக ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

எவ்வாறாயினும், இந்த படுகொலை சதித்திட்டம் புலனாய்வு அமைப்புகளினால் முறியடிக்கப்பட்டுள்ளதாகவும், அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, இந்த படுகொலை சதித்திட்டத்தின் பின்னணியில் விடுதலைப் புலிகளின் முன்னாள் உறுப்பினர்கள் இருக்கலாம் என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.

குறித்த படுகொலை சதித்திட்டம் தொடர்பில் முன்னாள் போராளிகள் நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், குறித்த அனைவரும் பிரான்சில் இருக்கும் முன்னாள் போராளி ஒருவரின் கீழ் செயற்படுவதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும், இது குறித்த விசாரணை நடத்தப்பட்டு வருவதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் பிரியந்த ஜெயக்கொடி தெரிவித்துள்ளார். எவ்வாறாயினும், நாட்டில் உடனடி தீவிரவாத அச்சுறுத்தல் இல்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில், நாட்டின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் பாதுகாப்பு தரப்பினர் செயற்பட்டு வருவதாக அவர் மேலும் தெரிவித்துள்ளதாக அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Comments