தமிழர் வரலாற்றின் ஆவணக்காப்பகத்தை மீட்டிப்பார்ப்பதற்கு அழைப்பு!

Report Print Dias Dias in சிறப்பு
104Shares

உலகெங்கும் சிதறிக்கிடக்கும் தமிழர் வரலாற்று ஆவணச் சான்றுகளை ஒன்றுதிரட்டி முப்பது இலட்சத்திற்கு மேற்பட்ட ஆவணங்களைக் கொண்ட மின்நுண்படங்களாக (Microfilm) ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது.

தென்னாசியவியல் மையம், சிட்டினி நிறுவனர்களில் ஒருவரும், சிட்னி பல்கலைக்கழகத்தில் வரலாற்றுத்துறைப் பேராசிரியருமான கலாநிதி. முருகர் குணசிங்கத்தினால் இந்த பதிப்பு உருவாக்கப்பட்டுள்ளது.

இவ் வரலாற்று ஆவணங்களை ஒன்றுதிரட்டி, சுவிற்சர்லாந்தில் பேர்ன் நகரில் "தமிழர் களறி" எனப் பெயரிடப்பட்டுள்ள ஆவணக்காப்பகத்தை (Tamils History Library and Archives) எனும் பெயரில் மாற்றி வெளியிடுவதற்கு மிகச்சிறந்த சந்தர்ப்பம் கிடைத்துள்ளது.

பெரும் இன அழிப்பிற்கு பின்னரான, விடுதலைப்போரின் வடிவம் மாறுபட்ட சூழலில் இன்று எமது இனம், மொழி, பண்பாடு, வாழ்வியல் தொடர்பான வரலாற்றுச் சான்றுகளை பேணிப்பாதுகாக்க வேண்டிய பெரும் வரலாற்றுப் பொறுப்பு தமிழ் மக்களாகிய எமக்கு உண்டு.

அதேப்போல் எமது இளந்தமிழ்ச் சமூகத்திற்கும் இவற்றை உரிய முறையில் கொண்டு செல்லவேண்டிய கடமையும் உள்ளது.

இப்பெரும் பணியினை இக்காலகட்டத்தில் நாம் ஆற்றத் தவறுவோமாயின், உலகில் நாங்கள் இன அடையாளத்தை இழந்த மக்கள் கூட்டமாகிவிடுவோம். ஆகவே இன்றைய சூழலில் எமது அடையாளங்களைப் பேணிக்காக்கும் பல்வேறு பெரும் பணிகளுள் இது முதன்மையாகிறது.

எதிர்வரும் 19.03.2017 ஞாயிற்றுக்கிழமை காலை 10.00 மணிக்கு நிகழவுள்ள இத் தமிழர் களறி தொடர்பான செயற்திட்டக் கலந்துரையாடலிற்கு அனைத்து தமிழர்களினதும் வருகையும் எதிர்ப்பார்க்கப்படுகின்றது.

இவ்விடயம் தொடர்பிலான தகவல்கள் தேவைப்படின் 078 697 70 25 எனும் இலக்கத்துடன் தொடர்புகொள்ளவும்.

Comments