யுத்தக்குற்ற விசாரணைகளில் இருந்து இலங்கை அரசு பின்வாங்க காரணம் என்ன..?

Report Print Murali Murali in சிறப்பு
286Shares

உள்நாட்டு அழுத்தம் காரணமாகவே யுத்தக்குற்ற விசாரணைகளில் இருந்து இலங்கை அரசாங்கம் பின்வாங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சர்வதேச ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ள செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தலைமையிலான அரசாங்க ஆட்சி காலத்தில் யுத்தக்குற்ற விசாரணைகளுக்காக அதிகளவான அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட்டு வந்தன.

எனினும், அதனை கடந்த அரசாங்கம் தட்டிக்கழிக்கும் வகையில் செயற்பட்டு வந்தது. இந்நிலையில், 2015ஆம் ஆண்டு ஏற்பட்ட ஆட்சி மாற்றம் காரணமாக, யுத்தக்குற்ற விசாரணைகள் குறித்து நம்பிக்கை ஏற்பட்டிருந்தது.

எனினும், தற்போது உள்நாட்டில் ஏற்பட்டுள்ள அழுத்தங்கள் காரணமாக யுத்தக்குற்ற விசாரணைகளில் இருந்து இலங்கை அரசாங்கம் பின்வாங்குவதாக அந்த செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, இறுதி யுத்தத்தின் போது இடம்பெற்றதாக கூறப்படும் மனித குலத்துக்கு எதிரான நடவடிக்கைகள் மற்றும் யுத்தக்குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் தமிழ் மக்கள் சர்வதேச விசாரணைகளை வலியுறுத்தி வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

Comments