தமிழர்களின் மாற்று தலைமையாக விக்னேஸ்வரன்: சம்பந்தனின் நிலை என்ன..?

Report Print Murali Murali in சிறப்பு

தமிழ் தேசியக் கூட்டமைப்பினால் தமிழ் மக்களின் பிரச்சினைகளை தீர்த்து வைக்க முடியவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாகவே, தமிழ் மக்கள் பேரவை தோற்றம் பெற்றதாக தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் இன்று இடம்பெற்ற செய்தியாலர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,

எதிர்வரும் மார்ச் மாதம் இடம்பெறவுள்ள மனித உரிமைகள் பேரவையின் கூட்டத்தொடரில் இலங்கை அரசாங்கம் கால நீடிப்பை கோரவுள்ளது. இதற்கு கூட்டமைப்பு ஆதரவளிப்பது தமிழ்மக்களுக்கு செய்யும் துரோகமாகும்.

மேலும், அரசாங்கத்தை தொடர்ந்தும் பாதுகாப்பதை விடுத்து முழுமையான சர்வதேச விசாரணையை வலியுறுத்த வேண்டும்.

உள்ளக விசாரணை பொறிமுறைக்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஆதரவு வழங்குமாக இருந்தால் அது தமிழ் மக்களுக்கு செய்யும் பெரும் துரோகமாகும்.

அத்துடன், கால நீடிப்பு விடயத்திற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஊடக பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் ஜெனிவா சென்றிருந்த சந்தர்ப்பத்தில் இணங்கியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

எவ்வாறாயினும், அரசாங்கத்தின் நிகழ்ச்சி நிரலுக்கு ஏற்பவே எதிர்க்கட்சி தலைவர் இரா.சம்பந்தன் செயற்படுவதாக அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

இதேவேளை, தமிழ் மக்களுக்கு மாற்றுத் தலைமையாக இருக்கின்ற காரணத்தால் வட மாகாண முதல்வர் விக்னேஷ்வரனைத் தாம் ஏற்றுக்கொள்ளத் தயாராக இருப்பதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Comments