இலங்கை குறித்து ட்ரம்பிடம் முக்கிய கோரிக்கை: நிறுத்தப்படுமா 900 மில்லியன் டொலர் நிதி..?

Report Print Murali Murali in சிறப்பு
282Shares

அமெரிக்காவினால் இலங்கை அரசாங்கத்திற்கு வழங்கப்படுகின்ற மில்லேனியம் சவால்களுக்கான நிதியை (Millennium Challenge Corporation) உடன் நிறுத்துமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பிடம் "ட்ரம்பிற்கான தமிழர்கள்" என்ற புலம் பெயர் அமைப்பினர் இந்த கோரிக்கையினை முன்வைத்துள்ளதாக அந்த நாட்டு ஊடகங்களை மேற்கோள்காட்டி செய்திகள் வெளியாகியுள்ளன.

வடக்கு கிழக்கு உள்ளிட்ட பகுதிகளில் வாழும் தமிழ் மக்களின் பிரச்சினைகள் இன்னும் தீர்க்கப்படவில்லை. அத்துடன், யுத்தக் குற்ற விசாரணைகளும் இது வரையில் நிறைவு செய்யப்படவில்லை.

இவ்வாறான நிலையில், இலங்கைக்கு வழங்கப்படும் குறித்த நிதியினை உடனடியாக நிறுத்துமாறு அந்த அமைப்பு அமெரிக்க ஜனாதிபதியிடம் கோரியுள்ளதாக அந்த செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி பராக் ஒபாமாவினால் கொண்டு வரப்பட்ட இந்த திட்டத்தின் கீழ் இலங்கைக்கு 900 மில்லின் டொலர்கள் வரை வழங்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Comments