'இராப்பாடிகளின் நாட்குறிப்பு' கவிதைத் தொகுப்பு வெளியீடு

Report Print Ashik in சிறப்பு
18Shares

மன்னாரில் இராப்பாடிகளின் நாட்குறிப்பு எனும் புதிய கவிதைத்தொகுப்பு வெளியிட்டு வைக்கப்படவுள்ளது.

மன்னார் தி.வினோதினி எழுதிய குறித்த கவிதைத்தொகுப்பு நூல் வெளியீட்டு விழா எதிர்வரும் வெள்ளிக்கிழமை(10) மாலை 3 மணிக்கு மன்னார் நகர மண்டபத்தில் இடம்பெறவுள்ளது.

மன்னார் தமிழ்ச்சங்கத்தின் ஏற்பாட்டில், அதன் தலைவர் எஸ்.ஏ.உதயன் தலைமையில் இந்நூல் வெளியீட்டு விழா இடம் பெறவுள்ளது.

குறித்த வெளியீட்டு விழாவிற்கு பிரதம விருந்தினராக வடமாகாண கல்வி அமைச்சர் த.குருகுலராசா , சிறப்பு விருந்தினராக மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் எம்.வை.எஸ்.தேசப்பிரிய, மற்றும் கௌரவ விருந்தினர்களாக மன்னார் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் ஏ.ஸ்ரான்லி டி மேல்,மாவட்டச் செயலக பிரதம கணக்காளர் க.கமலேஸ்வரன்,திட்டமிடல் பணிப்பாளர் கி.சிறிபாஸ்கரன் ஆகியோர் கலந்து கொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Comments