இலங்கையின் அரசியல் தீர்மானிக்கப் போகும் வெளிநாட்டவர்கள்! சமகால அரசாங்கம் கொடுக்கும் வாய்ப்பு

Report Print Vethu Vethu in சிறப்பு
43Shares

வெளிநாட்டில் வாழும் இலங்கையர்களுக்கு விரைவாக வாக்குரிமை வழங்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.

வெளிநாட்டில் வாழும் இலங்கையர்களுக்கு வாக்குரிமை வழங்குவது தொடர்பான கலந்துரையாடல் நேற்று நாடாளுமன்ற வளாகத்தில் நடைபெற்றது. இதன்போது விரைவாக வாக்குரிமையை வழங்குவது தொடர்பாக ஆராயப்பட்டது.

வெளிநாட்டில் வாழும் இலங்கையர்களுக்கு வாக்குரிமை வழங்குவது தொடர்பாக ஆராய நியமிக்கப்பட்ட குழுவின் தலைவர், அமைச்சர் தலதா அத்துகோரலவின் தலைமையில் கலந்துரையாடல் நடைபெற்றது.

அதற்கமைய வெளிநாட்டில் வாழும் இலங்கையர்களுக்கு கூடிய விரைவில் வாக்குரிமை வழங்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜே.சீ.அலவத்துவல இதன் போது சுட்டிக்காட்டியுள்ளார்.

குறைந்தபட்சம் 5 வருடம் வெளிநாட்டில் சேவை செய்யும் இலங்கையர்கள் அல்லது இரட்டை பிராஜாவுரிமை கொண்ட இலங்கையர்களுக்கு வாக்குரிமை வழங்கப்பட வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

விரைவில் அவசியமான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு இதன்போது இணக்கம் வெளியிடப்பட்டுள்ளது.

எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தல் அல்லது ஜனாதிபதி தேர்தலில் இருந்து வெளிநாட்டில் வசிக்கும் இலங்கையர்களுக்கு வாக்குரிமை வழங்கும் நோக்கில் செயற்படுவதற்கு அந்த குழு இணங்கியுள்ளது.

அதற்கமைய குறைந்த பட்சம் 27 இலட்ச இலங்கையர்களுக்கு வாக்குரிமை கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

Comments