இரகசியமாக கொண்டு வரப்பட்ட வாகனங்கள்! கொழும்பில் திரியும் புதிய வகை கார்கள்

Report Print Vethu Vethu in சிறப்பு
156Shares

வெளிநாடுகளிலிருந்து இலங்கைக்கு சட்டவிரோதமான முறையில் வாகனங்கள் கொண்டு வரப்பட்டமை தெரிய வந்துள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.

கடந்த சில நாட்களாக, நாட்டின் பல பாகங்களில் வெளிநாட்டவர்கள் வாகனம் ஓட்டும் பயிற்சியில் ஈடுபட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

அவர்களால் பயன்படுத்தப்பட்ட வாகனங்கள் இலங்கையின் எந்தவொரு நிறுவனங்களினாலும் கொண்டு வரப்பட்டதல்ல என கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் பல கார் இறக்குமதி நிறுவனங்களிடம் பேசப்பட்ட போது, அவ்வாறான புதிய வாகனங்களும் அறிமுகப்படுத்தவில்லை என அந்த நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.

கடந்தத காலங்களில் அரசாங்கத்தினால் இலங்கைக்கு கொண்டு வரப்பட்டதாக கூறப்படும் கார்கள் இதுவென சமூக ஊடகங்கள் கருத்து வெளியிடப்பட்டு வருகின்றது.

இது தொடர்பில் மோட்டார் வாகன நிறுவனங்களிடம் வினவிய போது மைக்ரோ நிறுவனம் மாத்திரம் இதற்கு உரிய பதிலளிக்கவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.

எப்படியிருப்பினும் இந்த வாகன சோதனையிடலுக்காக சீன நாட்டவர்களும் ஈடுபட்டுள்ளதாகவும், அதற்கான சில புகைப்படங்களும் சமூக வலைத்தளங்களில் வெளியிடப்பட்டுள்ளன.

Comments