இலங்கையின் அழகின் மீது ஈர்ப்பு கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் நட்சத்திரம்!

Report Print Vethu Vethu in சிறப்பு

இலங்கையின் அழகின் மீது ஈர்ப்பு கொண்டுள்ளதாக இந்திய கிரிக்கெட் அணியின் தலைவர் விராட் கோஹ்லி தெரிவித்துள்ளார்.

இதற்கு முன்னராக காலப்பகுதியில் இலங்கைக்கு கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் போது, அது குறுகிய காலப்பகுதியாக இருந்தது. எனினும் தற்போது நீண்டகாலம் இலங்கையில் தங்கிருப்பதால் அதன் அழகினை ரசிப்பதற்கு வாய்ப்பு கிடைத்துள்ளதாக விராட் கோஹ்லி தெரிவித்துள்ளார்.

விசேடமாக இறுதி டெஸ்ட் போட்டி மூன்று நாட்களில் நிறைவடைந்த காரணத்தினால் தனக்கு இலங்கையின் அழகை ரசிப்பதற்கு மேலும் சந்தர்ப்பம் கிடைத்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஒருநாள் போட்டியில் விளையாடுவதற்காக இரு அணியும் தம்புள்ளை சென்றுள்ளன. இந்நிலையில் விராட் கோஹ்லி ஊடகவியலாளர்களிடம் கருத்து வெளியிட்டார்.

சீகிரியா மற்றும் தம்புள்ளை ஆகிய பகுதிகளை பார்வையிட இன்னும் சந்தர்ப்பம் கிடைக்கவில்லை, எனினும் ஏனைய போட்டிகள் நடைபெறுவதற்கு முன்னர் அவற்றினை பார்வையிட வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையின் பல இடங்களின் அழகை வர்ணித்து விராட் கோஹ்லி தனது டுவிட்டர் பக்கத்தில் புகைப்படங்களை பதிவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.