வலையில் சிக்கிய அதிசய மீன்! இலங்கையின் பொக்கிஷமாக மாற்றம்

Report Print Vethu Vethu in சிறப்பு

தலைமன்னார் கடல் பிரதேசத்தில் அண்மையில் அரிய வகை புள்ளி சுறா மீன் ஒன்று சிக்கியிருந்தது.

உயிரிழந்த நிலையிலேயே இந்த மீன் சிக்கியதாக பொலன்னறுவை கிரிதலை வனவிலங்கு கால்நடை வைத்திய பிரிவு தெரிவித்துள்ளது.

11 அடியை கொண்ட இந்த சுறாவின் வாயில் பற்கள் இல்லாமல் காணப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த மீனை பதப்படுத்தி கிரித்தலை வனவிலங்கு அருங்காட்சியகத்தில் வைக்கப்படவுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

இலங்கையில் சிக்கிய மீன்களில் இதுவொரு விசித்திரமான மீன் இனமாக கருதப்படுகிறது. இதனையடுத்து பலரும் அறிந்து கொள்ளும் வகையில் பொக்கிஷமாக பேண நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.