கடந்து போனது ஒரு வருடம்! உயர்ந்த தலைவர் ஒருவர் தேவை என்பதை உணரவைத்த சாதனை பெண்

Report Print Shalini in சிறப்பு

இந்திய அரசியலில் தவிர்க்க முடியாத அரசியல் ஆளுமையாக இருந்த, மிகப்பெரிய மக்கள் சக்தியைப் பெற்று விளங்கியவர் தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா.

"விளையும் பயிர் முளையிலே தெரியும்" என்ற ஒரு பிரபலமான பழமொழி உண்டு.. அதனை போலவே தாம் கால் பதித்த அத்தனை துறைகளிலும் முத்திரை பதித்தார் ஜெயலலிதா.

திடீர் சுகவீனம் மற்றும் நீர்ச்சத்துக்கு குறைபாடு காரணமாக கடந்த ஆண்டு செப்டம்பர் 22ம் திகதி அப்பல்லோ மருத்துவமனையில் ஜெயலலிதா அனுமதிக்கப்பட்டிருந்தார்.

தொடர்ந்தும் 70 நாட்களுக்கு மேலாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா கடந்த ஆண்டு டிசம்பர் 5ஆம் திகதி இரவு 11.30 மணி அளவில் இயற்கை எய்தினார் என உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில், ஜெயலலிதா மறைந்து இன்றோடு ஓராண்டு கடந்துவிட்டது. ஜெயலலிதா இம்மண்ணை விட்டுச் சென்ற இந்த ஓராண்டில் தமிழகத்தில் பல அரசியல் மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன.

இதனை தமிழகத்தில் கடந்த ஓராண்டாக நடந்த நிகழ்வுகளை பார்க்கும் போது தெளிவாக புரிந்துகொள்ள முடிவதுடன், ஜெயலலிதா போன்ற ஒரு உயர்ந்த தலைவர் தேவை என்பதை உணரவைத்துள்ளது.

அந்த வகையில், மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா பற்றிய ஒரு தொகுப்பை இங்கே காணலாம்.