அடடே! ஜெயலலிதா மரணத்தை வைத்து நடத்தும் வித்தைகள்?

Report Print S.P. Thas S.P. Thas in சிறப்பு

தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் மரணத்தில் பல்வேறு மர்மங்கள் இருப்பதாக கடந்த ஆண்டில் இருந்து சந்தேகங்கள் எழுப்பட்டுவருகின்றன.

இந்நிலையில், எடப்பாடி பழனிசாமியும், ஓ. பன்னீர்செல்வமும் ஒன்று சேர்ந்ததன் பின்னர் ஜெயலலிதா மரணம் தொடர்பில் விசாரிப்பதற்கு ஒரு விசாரணை ஆணைக்குழு அமைக்கப்பட்டு, விசாரணைகளும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இந்தநிலையில், தான் டிடிவி தினகரன் ஆதரவாளரான முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் வெற்றிவேல் ஜெயலலிதா மருத்துவமனையில் இருப்பது போன்ற காணொளி ஒன்றினை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

ஓராண்டாக நீடித்த மர்மத்திற்கு ஒரு தூண்டிலைப் போட்டு இருக்கிறார் அவர். அந்த காணொளி உண்மையானது தானா? அது எப்பொழுது எடுக்கப்பட்டது? உண்மையில் அப்பலோவில் ஜெயலலிதா அனுமதிக்கப்பட்ட போது தான் அது எடுக்கப்பட்டதா? அல்லது முன்னர் எப்பொழுதாவது எடுக்கப்பட்டதா? என்பது குறித்து பல்வேறு சந்தேகங்கள் எழுந்துள்ள நிலையில், அந்த காணொளியை ஊடகங்கள் இப்பொழுது பயன்படுத்தக் கூடாது என்று தேர்தல் ஆணையம் தடை போட்டிருந்தது.

இன்றைய தினம் ஆர்கே நகர் இடைத்தேர்தல் நடத்தப்பட்டிருக்கிறது. ஆர்கே நகர் தேர்தலை இலக்கு வைத்து தான் இந்த வீடியோ வெளியிடப்பட்டதாக சந்தேகங்கள் எழுந்தன. ஆனால், அதற்காக தான் வெளியிடவில்லை என்றும், ஆதங்கத்தில் வெளியிட்டதாகவும் வெற்றிவேல் குறிப்பிட்டிருக்கிறார்.

இதுவொருபுறமிருக்க, இந்த காணொளி இப்பொழுது வெளியிடப்பட்டதற்கான நோக்கம் என்ன என்பது குறித்தே ஆராயப்படவேண்டியிருக்கிறது.

முன்னதாக ஜெயலலிதா சுயநினைவின்றியே மருத்துவமனைக்கு கொண்டுவரப்பட்டார் என்றும், அவருக்கு காய்ச்சல் தான் என்று தாங்கள் சமூக நலன் கருதி தெரிவித்ததாகவும் பிரதாப் ரெட்டி குறிப்பிட்டிருந்தார்.

ஆனால், தற்பொழுது வெளியிடப்பட்டிருக்கும் காணொளியில், ஜெயலலிதா எழுந்திருந்து தொலைக்காட்சி பார்த்தபடியே பழச்சாறு குடித்துக் கொண்டிருப்பது சந்தேகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

இதேவேளை, இந்த வீடியோ உண்மை தானா என்றும் நிபுணர்கள் ஆராய்ந்து வருகிறார்கள்.

இதேபோன்று கடந்த 2009ம் ஆண்டு, முள்ளிவாய்க்கால் இறுதிப் போரில் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் கொல்லப்பட்டார் என்றும், அவரின் சடலம் நந்திக் கடலில் மீட்கப்பட்டது என்று தெரிவித்திருந்த இலங்கை இராணுவம்,

அவரின் சடலம் என்று ஒன்றை காணொளியாக காண்பித்தது. ஆனால், அது உண்மையான காணொளியல்ல என்றும், இலங்கை அரசாங்கம் போலியனதாக காண்பித்தது என்று பல்வேறு சந்தேகங்கள் வெளியிடப்பட்டன.

விடுதலைப் புலிகளின் தலைவர் மீது ராஜீவ் காந்தி படுகொலை வழக்கு இருக்கின்ற நிலையில் அவர் கொல்லப்பட்டால் அந்த மருத்துவ அறிக்கை இந்திய அரசாங்கத்திடம் ஒப்படைக்கப்படவேண்டும். எனினும் இதுவரை இலங்கை அரசாங்கம் அந்த மருத்துவ அறிக்கையை சமர்ப்பிக்கவில்லை.

ஆக, விடுதலைப் புலிகள் அமைப்பு சிதைக்கப்பட்டது உண்மை. ஆயினும், புலிகளின் தலைமைக்கு என்ன நடந்தது என்பது தொடர்பான உண்மை நிலை இன்னமும் வெளியே வராமல் மர்மமாகவே இருக்கிறது.

அதற்கிடையில் இலங்கை அரசாங்கம் மக்களை திசை திருப்புவதற்காக தொழில் நுட்பங்களைப் பயன்படுத்தி, தனது திறமையை வெளிப்படுத்தியது. மக்களின் நம்பிக்கையை சிதைக்க அது முயன்றது.

இதேபோன்றதொரு நிகழ்வு தான் ஜெயலலிதா மரணத்திலும் நிகழ்ந்திருக்கிறது என்கிறார்கள் விமர்சகர்கள். ஜெயலலிதாவின் சிகிச்சை தொடர்பில் முன்னுக்குப்பின் முரண்பாடான கருத்துக்களை வெளியிட்டு மக்களை குழப்பிக் கொண்டிருந்தார்கள்.

பின்னர், ஜெயலலிதா ஆரோக்கியமாக இருக்கிறார் என்று குறிப்பிட்டார்கள். ஏழு மாதங்களின் பின்னர் அவருக்கு மாரடைப்பு வந்து இறந்துவிட்டார் என்று குறிப்பிட்டார்கள். சிசிடிவி காட்சிகள் எவையும் இல்லை என்றார்கள். தற்பொழுது வீடியோ தொலைபேசியில் எடுத்தாக குறிப்பிடுகிறார்கள்.

இதுபெரும் சதிச்செயலாக நோக்குகிறார்கள் விமர்சகர்கள். ஓராண்டு முழுமையாக முடிந்த நிலையில் மீண்டும் மக்களை குழப்புவதற்காக தொழில்நுட்பத்தை பயன்படுத்தப்பட்டிருக்கிறது.

மக்களை பரபரப்பிற்குள் மூழ்கச் செய்து, அரசியல் ரீதியான பார்வையை திசை திருப்புவதற்கான சூழ்ச்சிகள் இது என்று விமர்சிக்கப்படுகிறது.

ஆக, தொழில் நுட்பத்தின் துணை கொண்டு எதையும் செய்யலாம் என்ற காலம் வந்திருப்பதனால் இருப்பவரை இல்லாதது போன்றும் இல்லாதவரை இருந்தார் என்று காட்சிப்படுத்துவதும் சாதாரண ஒரு நிகழ்வாகியிருக்கிறது என்கிறார்கள் விமர்சகர்கள்.