ஐயப்பன் பத்தர்களுக்கு அரசாங்கம் கூறிய மகிழ்ச்சியான செய்தி!

Report Print Akkash in சிறப்பு

தேசிய புனித யாத்திரையாக ஐயப்பன் யாத்திரையை பிரகடனப்படுத்தும் அமைச்சரவை பத்திரம் ஒன்றை அமைச்சரவையில் தாக்கல் செய்யவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

2018ஆம் ஆண்டின் ஜனவரி மாதம் இது குறித்த அமைச்சரவை பத்திரத்தை தாக்கல் செய்யவுள்ளதாக அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

ஐயப்பன் விரதத்தினை முன்னிட்டு கருப்பண்ணசாமி பூஜை கொழும்பு - ஜிந்துபிட்டி மைதானத்தில் இன்று மாலை வெகு சிறப்பாக இடம்பெற்றது. இதில் கலந்து கொண்ட அமைச்சர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

தொடர்ந்தும் பேசிய அவர், “தேசிய புனித யாத்திரையாக ஐயப்பன் யாத்திரையை பிரகடனப்படுத்தும் அமைச்சரவை பத்திரம் ஒன்றை அடுத்த ஆண்டு ஆரம்பத்தில் அமைச்சரவையில் தாக்கல் செய்யவுள்ளேன்.

தேசிய ரீதியில் ஐயப்பன் யாத்திரைக்கு அங்கீகாரம் கிடைக்க வேண்டும் என்ற நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.