செயற்கைகோளை செலுத்தியது இந்தியா! இலங்கை உள்ளிட்ட நாடுகளின் இராணுவ செயற்பாடுகளை கண்காணிக்க திட்டம்

Report Print Murali Murali in சிறப்பு

இந்தியாவினால் விண்ணில் செலுத்தப்பட்டுள்ள புதிய செயற்கைகோள் ஊடாக இலங்கை உள்ளிட்ட நாடுகளில் இராணுவ செயற்பாடுகளை கண்காணிக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

“இஸ்ரோ” விண்வெளி ஆய்வு மையத்தின் விஞ்ஞானிகளை மேற்கோள்காட்டி இந்திய ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய விண்வெளி ஆய்வு மையமான “இஸ்ரோ” தனது 100வது செயற்கைக் கோளான கார்ட்டோசாட்-2ஐ இன்று புவிவட்டப் பாதையில் வெற்றிகரமாக நிலைநிறுத்தியுள்ளது.

இன்று மொத்தம் 31 செயற்கைக் கோள்கள் விண்ணில் செலுத்தப்பட்டுள்ளன. இதில் கார்ட்டோசாட்-2 தவிர ஒரு நானோ மற்றும் ஒரு மைக்ரோ என 3 செயற்கைக் கோள்கள் இந்தியாவுக்கானது.

இந்திய இராணுவத்துக்கும் கார்ட்டோசாட்-2 செயற்கைக் கோள் மிகப்பெரிய பங்களிப்பை வழங்க உள்ளது. இந்தியாவின் எல்லைப் பகுதிகளை கண்காணிக்கும் பணியை இந்த செயற்கைக் கோள் உதவியுடன் மேற்டிகொள்ள முடியும்.

அத்துடன், சர்ஜிக்கல் தாக்குதல் போன்ற அதிரடி நடவடிக்கைகள் மேற்கொள்ள இந்த செயற்கைக்கோள் வழிகாட்டும்.

எல்லையில் தீவிரவாதிகளின் பதுங்கு குழிகளை கண்டுபிடித்து அழிக்க இந்த செயற்கைக் கோள் தரும் தகவல்கள் பயனுள்ளதாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையிலேயே, இந்தியாவினால் விண்ணில் செலுத்தப்பட்டுள்ள புதிய செயற்கைகோள் ஊடாக இலங்கை உள்ளிட்ட நாடுகளில் இராணுவ செயற்பாடுகளை கண்காணிக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணில் செலுத்தப்பட்டுள்ள செயற்கைகோளை கொண்டு, இலங்கை, பாகிஸ்தான், பங்களாதேஷ், சீனா உள்ளிட்ட நாடுகளின் இராணுவ செயற்பாடுகளை இந்தியா கண்காணிக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.