இலங்கை ஆழ்கடலில் கண்டுபிடிக்கப்பட்ட அதிசய கப்பல்

Report Print Vethu Vethu in சிறப்பு

இலங்கைக்கு அண்மித்த பகுதியில் வரலாற்று சிறப்புமிக்க கப்பல் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை கடல் தொல்பொருளியல் பிரிவினால் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் மூலம் இந்தக் கப்பல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

'RMS RANGOON' என்ற பெயர் கொண்ட மிகவும் முக்கியமான தொல்லியல் மதிப்பு கொண்ட கப்பலே கண்டுபிடிக்கப்படவுள்ளது.

இந்த கப்பல் பிரித்தானிய ரோயல் தபால் சேவைக்காக பயன்படுத்தப்பட்டுள்ளது. நீராவி சக்தியில் இயங்கும் இந்த கப்பல் 1871ஆம் ஆண்டு நவம்பர் மாதம் முதலாம் திகதி காலி கடலில் மூழ்கியதாக கூறப்படுகின்றது.

ROYAL MAIL SHIP' என்பதனை குறிக்கும் வகையிலேயே இந்த கப்பல் 'RMS' என அழைக்கப்படுகின்றது.

காலி துறைமுகத்திற்கு, ஏழு கடல் மைல்கள் தொலைவில் 30 மீற்றர் ஆழ் கடலில் இந்த கப்பல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

மத்திய கலாச்சார நிதியினால் மேற்கொள்ளப்பட்ட கடல் ஆய்வின் ஊடாக இந்த கப்பலின் பல முக்கிய பாகங்கள் உறுதி செய்யப்பட்டுள்ளன.

Latest Offers