இலங்கை கடற்கொள்ளையர்கள் அட்டூழியம்! முன்னணி இந்திய ஊடகம் தகவல்

Report Print Murali Murali in சிறப்பு

இந்திய எல்லைக்கு உட்பட்ட கடற்பரப்பில் மீன்பிடியில் ஈடுபட்டிருந்த தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல் மேற்கொண்டுள்ளதாக முன்னணி இந்திய ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

அத்துடன், குறித்த மீனவர்களிடம் இருந்து மீன்களை பறித்து சென்றுள்ளதாகவும் அந்த ஊடகம் வெளியிட்ட செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய எல்லைக்கு உட்பட்ட கடற்பரப்பில் கோடியக்கரையை சேர்நத் ஏராளமான மீனவர்கள் மீன்பிடித்துகொண்டிருந்ததாகவும், அங்கு வந்த இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல் மேற்கொண்டுள்ளதாகவும் அந்த ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

இரும்பு, கம்பி உள்ளிட்ட பொருட்களை கொண்டு மீனவர்கள் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், படகுகளுக்கு சேதம் ஏற்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதில் நான்கு மீனவர்களுக்கு படுகாயம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்நிலையில், மீனவர்கள் கொடுத்த தகவலின் அடிப்படையில் சக மீனவர்கள் அவர்களை மீட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.

ஏற்கனவே, இலங்கை கடற்படையினரின் கெடுபிடிகளுக்கு மத்தியில் மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள தமிழக மீனவர்களை தற்போது இலங்கை கடற்கொள்ளையர்களும் அச்சுறுத்தி வருவதாக அந்த செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.