ஆசியாவின் அதிசயமாக மாறும் திருக்கோணேஸ்வரம்!

Report Print Samy in சிறப்பு

திருகோணமலை கோணேஸ்வர ஆலயத்தை ஆசியாவின் தலை சிறந்த ஆலயமாக மேம்படுத்துவதற்கான முயற்சிகள் இந்தியாவினால் மேற்கொள்ளப்படவுள்ளது.

புதுடில்லி முதலீட்டாளர்கள் இந்த முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

கடந்த சனிக்கிழமை விசேட விமானம் மூலம் திருகோணமலைக்கு விஜயம் செய்ததுடன், கிழக்கு மாகாண ஆளுநர் ரோஹித போகொல்லாகமவுடனும் இது குறித்து பேச்சுவார்த்தைகளை நடத்தியுள்ளனர்.

மேலும் திருகோணமலையில் சுற்றுலாத்துறையுடன் தொடர்புடைய பிரதேசங்களையும் இவர்கள் பார்வையிட்டதுடன், திருக்கோணேஸ்வர ஆலயத்தில் விசேட வழிபாடுகளிலும் கலந்து கொண்டனர்.

மேற்படி குழுவினர் திருக்கோணேஸ்வரம் ஆலயத்தில் யாத்திரிகர்களுக்கான உட்கட்டுமான வசதிகளை அதிகரிக்கத் திட்டமிட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.