கிளிநொச்சியில் சிறப்பாக கொண்டாடப்பட்ட சுதந்திர தினம்

Report Print Suman Suman in சிறப்பு

இலங்கையின் 70ஆவது சுதந்திர தினம் இன்று கிளிநொச்சியிலும் வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டுள்ளது.

கிளிநொச்சி மாவட்ட செயலகத்தின் ஏற்பாட்டில் அனைத்து திணைக்களங்களும் இணைந்து குறித்த நிகழ்வினை ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.

காலை 9 மணியளவில் குறித்த நிகழ்வு தேசிய கொடியேற்றலுடன் ஆரம்பமான நிலையில் தொடர்ந்து கலை நிகழ்வுகளும் இடம்பெற்றன.

குறித்த நிகழ்வுகள் கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகம் தலைமையில் இடம்பெற்றிருந்தன.

இந்த நிகழ்வில் மேலதிக அரசாங்க அதிபர், திணைக்களம் சார் உத்தியோகத்தர்கள், அதிபர்கள், ஆசிரியர்கள் என பலர் கலந்து கொண்டனர்.