இலங்கையர்களுக்கு தமிழ், சிங்கள புத்தாண்டு வாழ்த்து தெரிவித்த அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப்

Report Print Murali Murali in சிறப்பு

தமிழ், சிங்கள புத்தாண்டை முன்னிட்டு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் இலங்கையர்களுக்கு புத்தாண்டு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், நல்லாட்சி, பொருளாதார ஸ்திரத்தன்மை மற்றும் நல்லிணக்கத்தின் ஊடாக இலங்கையுடன் தொடர்ந்தும் இணைந்து செயற்படுவதாக அமெரிக்க ஜனாதிபதி தனது வாழ்த்துச் செய்தியில் கூறியுள்ளார்.

அந்த வகையில், இரு நாடுகளுக்கும் இடையிலான உறவு, மலர்ந்துள்ள இந்தப் புத்தாண்டில் மேலும் பலப்படுத்திக்கொள்ள எதிர்ப்பார்த்துள்ளதாக அவர் தனது வாழ்த்து செய்தியில் மேலும் குறிப்பிட்டுள்ளார்.