இலங்கையில் இப்படியொரு உலக சாதனையா.....?

Report Print Vethu Vethu in சிறப்பு

உலகின் மிக நீளமாக உருளைக்கிழங்கு கேக் நுவரெலியாவில் உள்ள பிரபல ஹோட்டல் ஒன்றில் தயாரிக்கப்பட்டுள்ளது.

கிழங்கினால் தயாரிக்கப்படும் மிக நீளமான கேக் என்ற உலக சாதனையாக இது பதிவு செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தக் கேக் 111 மீற்றர் நீளமும் 380 கிலோ கிராம் நிறையையும் கொண்டுள்ளது. 75 கிலோகிராம் உருளைக்கிழங்கு பயன்படுத்தப்பட்டுள்ளது. இதற்காக சுமார் மூன்று இலட்சம் ரூபா செலவிடப்பட்டுள்ளது.

இந்த கேக்கிற்கு பொட்டோ கேக் என பெயரிடப்பட்டுள்ளது. இதனை தயாரிப்பதற்காக பிரபல சமையல் கலைஞர்கள் 50 பேர் பணியாற்றியுள்ளனர்.

நுவரெலியா கிராண்ட் ஹோட்டலின் வெளி அரங்கில் இந்த பாரிய உருளைக்கிழங்கு கேக் தயாரிக்கப்பட்டுள்ளது.

உருளைக்கிழங்கு மூலம் தயாரிக்கப்பட்ட உலகின் மிகப்பெரிய கேக் தயாரிக்கும் முயற்சியாக இந்த கேக் தயாரிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.