கடலுக்குள்ளிருந்து மீட்கப்பட்ட சிலை தொடர்பில் வெளிவந்த புது தகவல்

Report Print Shalini in சிறப்பு

காலி, கோட்டை பிரதேசத்தில் கடலுக்குள் மூழ்கியிருந்த நிலையில் மீட்கப்பட்ட சிலை தொடர்பில் புதிய தகவல் வெளிவந்துள்ளது.

அத்துடன் மீட்கப்பட்ட சிலையின் புகைப்படமும் வெளிவந்துள்ளது.

குறித்த சிலை இரண்டரையடி உயரமுடைய மிகவும் பழமையான புத்தர் சிலை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது இந்த சிலை காலி பிரதேசத்தில் உள்ள சுதர்மாராம விகாரையில் கையளிக்கப்பட்டுள்ளது.

சுமார் 40 கிலோகிராம் நிறையும், இரண்டரையடி உயரமும் கொண்ட இச்சிலை தொடர்பில் உரிய ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கோட்டை அருகே உள்ள கடற்கரையில் இருந்து 150 - 200 அடி தொலைவில் கடல் நீரில் 5 - 10 ஆழத்தில் இந்தச் சிலை புதையுண்டு இருந்தமை குறிப்பிடத்தக்கது.