இலங்கையில் திடீரென தோன்றிய அதிசயம்!

Report Print Vethu Vethu in சிறப்பு

அண்மைக்காலமாக இலங்கை நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக பல புவியியல் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன.

அந்தவகையில், பல்வேறு பகுதிகளில் புதிய நீர்வீழ்ச்சிகள் ஏற்பட்டு இலங்கைக்கு அழகு சேர்த்துள்ளன.

அண்மைய நாட்களாக ஊவா மாகாணத்தில் பெய்து வரும் அடை மழையை காரணமாக கொழும்பு - பதுளை பிரதான வீதியின் இருமருங்கிலும் திடீர் நீர்வீழ்ச்சிகள் ஏற்பட்டுள்ளன.

இதன் காரணமாக அந்த பகுதிகளில் உள்ள மலைகளில் வழிந்தோடும் நீர்வீழ்ச்சிகள் பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளன.

பொதுவாக டிசம்பர் மாதங்களில் நிலவும் காலநிலை காரணமாக இவ்வாறான நீர்வீழ்ச்சிகள் ஏற்படுவது வழமை. எனினும், நாட்டின் கடும் வறட்சியான காலநிலை நிலவி வரும் வேலையில் புதிய நீர் சிவீழ்ச்சியின் உருவாக்கம் சுற்றுலா பயணிகளை பெரிதும் கவர்ந்துள்ளது

எனினும் எதிர்பார்க்காத வகையில் தற்போது திடீரென இந்த நீர்வீழ்ச்சிகள் இயங்க ஆரம்பித்துள்ளதாக கூறப்படுகின்றது.

விசேடமாக இந்த நாட்களில் பதுளை கொழும்பு பிரதான வீதியில் பண்டாரவளையில் இருந்து பலங்கொடை வரையிலான பகுதியில் உள்ள மலைகளில் இவ்வாறான 15 திடீர் நீர்வீழ்ச்சிகள் உருவெடுத்துள்ளது.