சர்வதேச கணிதப் போட்டியில் கலந்து கொள்ள சிங்கப்பூர் செல்லும் தமிழ் மாணவன்

Report Print Rusath in சிறப்பு

மட்டக்களப்பு - பட்.களுதாவளை மகா வித்தியாலய மாணவன் சர்வதேச கணிதப் போட்டியில் கலந்து கொள்வதற்கு சிங்கப்பூர் செல்ல தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

நாடளாவிய ரீதியில் நடைபெற்ற ஆங்கில மொழிமூலமான கணித போட்டிப் பரீட்சையில் வெற்றிபெற்று தில்லையம்பலம் ஜனுஸ்கன் என்ற மாணவன் சிங்கப்பூரில் நடைபெற இருக்கும் சர்வதேச ஆங்கில மொழிமூலமான கணிதப் போட்டியில் பங்குபெற தெரிவு செய்யப்பட்டுள்ளதாக மட்.பட்.களுதாவளை மகா வித்தியாலய நிருவாகம் இன்று தெரிவித்துள்ளது.

தரம் 6 தொடக்கம் தரம் 11 வரையுள்ள மாணவர்களுக்கு கடந்த 10.05.2018 அன்று நடைபெற்ற போட்டிப் பரீட்சையில் 11 ஆம் தரத்தில் கல்வி பயிலும் தில்லையம்பலம் ஜனுஸ்கன் என்ற மாணவன் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

இந்த மாணவனின் திறமையினால் பாடசாலைக்கும், களுதாவளை மண்ணுக்கும், மட்டக்களப்பு மாவட்டத்திற்கும், கிழக்கு மாகாணத்துக்கும், நாட்டுக்கும் பெருமை சேர்த்துள்ளதாகவும், இம்மாணவனுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதோடு சர்வதேச ரீதியில் நடைபெறும் போட்டியில் வெற்றிபெற வாழ்த்துக்களை தெரிவிப்பதாக கல்விச் சமூகம் தெரிவிக்கின்றது.