பூக்கொடியில் காய்த்த மாங்காய்

Report Print Steephen Steephen in சிறப்பு

தவுலகல - ஹியாராபிட்டிய ஹங்தேஸ்ஸ இடத்தில் வசித்து வரும் முன்னாள் கல்விப் பணிப்பாளரான அனில் எதிரிசிங்க தமது வீட்டுத் தோட்டத்தில் இருக்கும் மாமரத்தில் மாங்காய் பறித்த போது, அருகில் இருந்த பூக்கொடியில் மாங்காய் காய்த்துள்ளதை கண்டுள்ளார்.

மா மரத்திற்கு அருகில் இந்த பூங்கொடி வளர்ந்து வருகிறது. பூக்கொடியின் கொடி ஒன்றில் இந்த மாங்காய் காய்த்துள்ளது.

பூக்கொடியில் காய்திருக்கும் இந்த மாங்காயை காண பலர் வந்து செல்வதாகவும், மா மரத்தின் கிளை ஒன்றை பூச் செடியுடன் இணைக்க உள்ளதாகவும், காய்த்துள்ள காயை பறிக்க விரும்பவில்லை எனவும் அனில் எதிரிசிங்க தெரிவித்துள்ளார்.