உயிர் காக்கும் பொக்கிஷங்கள் உயிர்பெற்றால்...! தற்போதுள்ள இலங்கையின் நிலை?

Report Print Sujitha Sri in சிறப்பு

இந்த பூமியில் உயிர்கள் வாழ்வதற்கு நிலம், நீர், காற்று என்பன எவ்வளவு அத்தியாவசியமானவையோ அதேபோன்று தாவரங்களும் நம் உயிரை காக்கும் பொக்கிஷங்களாக திகழ்கின்றன.

ஆனால் பேச வாயில்லை, அழுவதற்கு கண்கள் இல்லை என்ற காரணங்களால் நாம் தாவரங்களுக்கு எத்தனை மோசமான துன்பங்களை கொடுக்கின்றோம்.

மனிதனை கொன்றால் அது கொலை என்றால், மரத்தை கொன்றால்........? ஏன் நாம் எதனையும் சிந்திக்காது சுயநலவாதிகளாக வாழ்கின்றோம்.

தாம் இழந்த தம்முடைய இருப்பிடத்தை மீண்டும் எடுத்துக் கொள்வதற்காக உயிர் பெற்று வந்த மரங்கள் மனிதர்களை வெட்டி வீழ்த்தினால் என்ன நடக்கும்?

ஒரு தாவரத்தை அழிக்கும் முன்பு இவ்வாறு என்றாவது நடந்தால் என்ன செய்வது என்பதை சற்றேனும் சிந்தித்ததுண்டா?