கேரளா வெள்ளம்! நாசா செயற்கைக் கோள் வெளியிட்டுள்ள படங்கள்

Report Print Murali Murali in சிறப்பு

இந்தியாவில் கேரளா மற்றும் கர்நாடகாவில் வெள்ளம் எவ்வாறு தீவிரமடைந்திருந்தது என்பதை நாசா செயற்கைக் கோள் படங்கள் வெளிப்படுத்தியுள்ளன.

இந்தியா முழுவதும் கடந்த 13ம் திகதி தொடக்கம் 20ம் திகதி வரை கனமழை பெய்ததாக நாசா அறிக்கை வெளியிட்டுள்ளது. நாசா வெளியிட்டுள்ள படத்தின் ஒரு பகுதி, மழை வடக்கு தீபகற்பம் வரை பரந்து விரிந்து வியாபித்திருந்ததை சுட்டிக் காட்டுகிறது.

தீபகற்பத்தின் மேற்கு பாதி பகுதியிலிருந்து வங்க கடலின் கிழக்கு பாதி பகுதி வரை ஒரு வாரத்துக்கு அடர்த்தியிலான மழை பெய்துள்ளது. இது பொதுவான பருவமழை வீழ்ச்சி

அடுத்த பகுதியில் மழை எந்த அளவுக்கு அடர்த்தியாக, அதி தீவிரமாக இருந்தது என்பதை சுட்டிக் காட்டுகிறது.

இந்தியாவின் தென்மேற்கு கடலோர பகுதி மற்றும் மேற்கு தொடர்ச்சிமலை பகுதிகளில் எந்த அளவுக்கு பலத்த மழை பெய்தது என்பதை இது சுட்டிக் காட்டுகிறது.

மேற்கு தொடர்ச்சி மலைகள் இமயமலைகளை காட்டிலும் சிறியதாக உள்ள போதிலும் அந்த மலைத்தொடர் இந்திய மேற்கு கடலோர பகுதிக்கு இணையாக 2000 மீட்டருக்கு மேல் உள்ளது.

இதன் காரணமாக இந்திய மேற்கு கடலோர பகுதியுடன் இணைந்து மேற்கு தொடர்ச்சி மலைகளும் நல்ல மழையை வீழ்ச்சி பெற்றன.