சீனாவில் சாதனை படைத்த வவுனியா மாணவனுக்கு கௌரவிப்பு

Report Print Theesan in சிறப்பு

சீனா நாட்டில் இடம்பெற்ற கணித, விஞ்ஞான ஒலும்பியாட் போட்டியில் வெண்கலப்பதக்கத்தை வென்ற மாணவன் மற்றும் குறித்த போட்டியில் பங்குபற்றிய மாணவன் ஆகியோரை கௌரவிக்கும் நிகழ்வு நடைபெற்றுள்ளது.

சர்வதேச ரீதியில் இடம்பெற்ற விஞ்ஞான, கணித பாடத்தில் வெண்கலப்பதக்கத்தினை பெற்றுக்கொண்ட மாணவன் ஜெயக்குமார் லெவிந் மற்றும் இப்போட்டியில் பங்குபற்றிய பத்மநாதன் ஆவினன் ஆகியோர் கௌரவிக்கப்பட்டுள்ளனர்.

வவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலய பாடசாலையில் இன்று காலை பாடசாலை அதிபர் த.அமிர்தலிங்கம் தலைமையில் இடம்பெற்றுள்ளது.

இந் நிகழ்வு வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலய சமூகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்த கௌரவிப்பு நிகழ்வில் வவுனியா தெற்கு கல்வி வலய உதவிப்பணிப்பாளர், ஆசிரிய ஆலோசகர்கள், கணிதம் மற்றும் விஞ்ஞான பாடங்களை மாணவர்களுக்கு பயிற்றுவித்த ஆசிரியர்கள், பெற்றோர்கள், மாணவர்கள் எனப் பலரும் கலந்து கொண்டுள்ளனர்.

Latest Offers