விஜய்யின் சர்கார் பட டீசரை கொண்டாடிய இலங்கை இளைஞர்களுக்கு கிடைத்த மகிழ்ச்சியான செய்தி

Report Print Shalini in சிறப்பு

ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் சர்கார் படத்தின் டீசர் நேற்று வெளியாகி உலகளவில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

நடிகர் விஜய்யின் சர்கார் படம் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வருகின்றது.

இந்த நிலையில் நேற்று வெளியாகிய டீசரை பார்வையிட்ட விஜய் ரசிகர்கள் மிகவும் கோலாகலமாக கொண்டாடியுள்ளனர்.

அந்த வகையில் இலங்கையிலும், விஜய் ரசிகர்கள் சர்கார் பட டீசரை பார்த்து ரசித்து அதை கொண்டாடியுள்ளனர்.

குறிப்பாக வவுனியாவில் மிகவும் பிரம்மாண்டாக சர்கார் டீசர் கொண்டாடப்பட்டுள்ளது. இதை அந்த இளைஞர்களில் ஒருவர் காணொளியாக எடுத்து சமூகவலைத்தளங்களில் பதிவேற்றியுள்ளார்.

எனினும் குறித்த காணொளி தற்போது உலகளவில் பிரசித்தி பெற்றுள்ளது.

அதாவது சர்கார் படத்தை தயாரிக்கும் சன் பிக்சர்ஸ் நிறுவனம் குறித்த காணொளியை தனது உத்தியோகப்பூர்வ டுவிட்டர் தளத்தில் பகிர்ந்துள்ளது. இது வவுனியா இளைஞர்களுக்கு மேலும் மகிழ்ச்சியை கொடுத்துள்ளதாக சமூக வலைத்தளங்களில் செய்திகள் வெளியாகி வருகின்றன.