விடுதலைப் புலிகளின் தலைவரின் பிறந்த தினத்தில் தென்னிந்திய பிரபலத்தின் செய்தி

Report Print Shalini in சிறப்பு

விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் 64ஆவது பிறந்தநாள் இன்று பல இடங்களிலும் கொண்டாடப்படுகின்றது.

இவருக்கு சமூக வலைத்தளங்களில் பலரும் வாழ்த்து தெரிவித்து பதிவிட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் பிரபல தென்னிந்திய நடிகர் சதீஸ் தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

இலங்கைக்கு அண்மையில் விஜயம் செய்திருந்த இவர், வல்வெட்டித்துறையில் உள்ள பிரபாகரனின் வீட்டுக்கு சென்று புகைப்படம் எடுத்திருந்தார்.

அந்த புகைப்படத்தை இன்று தனது டுவிட்டரில் பதிவேற்றி “தமிழ் தேசியத்தின் ஒப்பற்ற தலைவர் மேதகு பிரபாகரன் அவர்களின் பிறந்ததினம் இன்று.... தார் பூசி அழிக்கப்பட்டிருக்கும் அவர் பெயரும் புலி போல் தோன்றும் அதிசயம்” என குறிப்பிட்டுள்ளார்.

Latest Offers