தென்னிந்திய சினிமாவில் பாடும் வாய்ப்பை பெற்ற ஈழத் தமிழர் யார் தெரியுமா??

Report Print Dias Dias in சிறப்பு

புலம்பெயர் தமிழர் ஒருவருக்கு தென்னிந்திய திரைப்படம் ஒன்றில் பாடும் வாய்ப்பினை பிரபல தென்னிந்திய இசையமைப்பாளர் எம்.ஜிப்ரான் வழங்க முன்வந்துள்ளார்.

வாகைசூடவா, விஷ்வரூபம் - 2, ராட்சசன் உள்ளிட்ட பல திரைப்படங்களுக்கு பின்னணி இசை வழங்கி தென்னிந்திய திரை உலகில் இன்று அதிகம் பேசப்படுகின்ற ஒரு இசையமைப்பாளராக வலம் வந்துகொண்டிருப்பவர் ஜிப்ரான்.

ஐ.பீ.சி தமிழ் தொலைக்காட்சியில் தற்பொழுது நடைபெற்று வருகின்ற சிறுவர்களுக்கான தங்கத் தமிழ் குரல் தேடல் பாடல் போட்டி நிகழ்ச்சியின் வெற்றியாளருக்கு, அனிசின் இயக்கத்தில் உருவாகி வருகின்ற பகைவனுக்கு அருள்வாய் என்ற திரைப்படத்தில் பின்னணி பாடல் ஒன்றை பாடுவதற்கான வாய்ப்பினை வழங்குவதற்கு முன்வந்துள்ளார் இசையமைப்பாளர் ஜிப்ரான்.

ஐரோப்பா மற்றும் கனடா தேசங்கள் தழுவிய ரீதியில் ஐ.பீ.சி தமிழ் நடத்தி வருகின்ற இந்த பாடல் போட்டியின் இறுதிப் போட்டி, பிரபல இசையமைப்பாளர்கள் மற்றும் பாடகர்கள் நடுவர்களாக கலந்து கொள்ள, எதிர்வரும் டிசம்பர் மாதம் 8ஆம் திகதி சுவிட்சலார்ந்து போரம் பிரைபூர்க் மண்டபத்தில் நடைபெற இருக்கின்றது.

ஆயிரக்கணக்கான ஐரோப்பிய தமிழர்கள் மத்தியில் மிக பிரமாண்டமான மேடையில் நடைபெற இருக்கும் இந்த ஐ.பீ.சி தமிழா நிகழ்ச்சியில், இசையமைப்பாளர் ஜிப்ரான் வெற்றியாளருக்கான அந்த திரைப்படப் பாடல் வாய்ப்பை அறிவிப்பார் என்று கூறப்படுகின்றது.