பகைவனுக்கு அருள்வாய் திரைப்படத்தில் ஈழத் தமிழ் குரல்! ஜிப்ரான்

Report Print Gokulan Gokulan in சிறப்பு

இசையமைப்பாளர் ஜிப்ரானின் இசையில் பாடப்போகும் முதலாவது ஈழத்து பாடகர் யார் என்பதை அறிந்து கொள்ள சுவிற்சர்லாந்தில் நடைபெறவுள்ள தங்கத் தமிழ் குரல் இளையோர் நிகழ்விற்கு அனைவரையும் வருகை தரும்படி ஐ.பி.சி தமிழ் அழைப்பு விடுத்துள்ளது.

போட்டியின் இறுதிச்சுற்று டிசம்பர் மாதம் எட்டாம் திகதி Forum Fribourg இல் நடைபெறவுள்ளது.

இந்த நிலையில் தனது இசையில் பாடப்போகும் அந்த திறமைசாளியை தெரிவு செய்வதற்காக, போட்டியின் நடுவராக பங்கேற்கவுள்ளார் ஜிப்ரான்.

வாகை சூடவா திரைப்படத்தின் மூலம் தனது திரை இசைப் பயணத்தை ஆரம்பித்த ஜிப்ரான், இசையுடன் தான் செலவு செய்யும் ஒவ்வொரு நொடியும் தனது வாழ்க்கையின் மகிழ்ச்சியான தருணங்கள் எனத் தெரிவித்துள்ளார்.

தனது இசையில் வெளிவரவுள்ள ‘பகைவனுக்கு அருள்வாய்’ திரைப்படத்தில் பாடும் வாய்ப்பை தங்கத் தமிழ் குரல் இளையோர் போட்டியின் வெற்றியாளர் பெறுவார் என்றும் உறுதி அளித்துள்ளார்.

Latest Offers