புலம்பெயர் தமிழர்களின் பெருங்கலை கனவொன்று நனவாகும் தருணம்!

Report Print Gokulan Gokulan in சிறப்பு

புலம்பெயர் தமிழர்களின் பெருங்கலை கனவொன்று சுவிஸ் மண்ணில் நனவாகும் முகமாக ஐபிசி தமிழா நிகழ்வு இடம்பெறவுள்ளது.

வருகின்ற எட்டாம் திகதி டிசம்பர் மாதம் Forum Fribourg மண்டபத்தில் இடம்பெறவுள்ள ‘ஐபிசி தமிழா” நிகழ்வில் மாபெரும் போட்டிகள் இரண்டிற்கான இறுதிச் சுற்று நடைபெறவுள்ளது.

‘நாட்டியதாரகை’ பரத நாட்டிய போட்டியில் வெற்றி பெறப்போகும் தாரகைக்கு ஒரு கிலோகிராம் நிறையுடைய தங்கக்கிரீடம் பரிசாக சூடப்படவுள்ளது.

இந்த போட்டியில் நடுவராக கலந்து சிறப்பிக்கவுள்ள பிரான்ஸ் நாட்டை சேர்ந்த பிரபல நடன ஆசிரியர் ஸ்ரீ தயாளசிங்கம் “இவர்கள் எங்கள் குழந்தைகள். இவர்களை உச்சத்தில் வைத்துப் பார்க்க வேண்டியது எங்களுடைய கடமையாகும்” எனப் பெருமிதம் வெளியிட்டுள்ளார்.

Latest Offers