இலங்கை அரசியலில் இராணுவத்தின் தலையீடு வரும் அபாயம்! பேராசிரியர் இராமு. மணிவண்ணன்

Report Print S.P. Thas S.P. Thas in சிறப்பு

முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க மீண்டும் அதிகாரத்திற்கு வந்தால் பாராளுமன்றம் இயங்காது என சென்னைப் பல்லைக்கலைக்கழகத்தின் அரசியல் அறிவியல்துறை பேராசிரியர் இராமு மணிவண்ணன் தெரிவித்தார்.

இலங்கையில் ஏற்பட்டிருக்கும் அரசியல் குழப்பம் தொடர்பாகவும், அதன் போக்கும் தொடர்பில் பேராசிரியரிடம் பேசினோம். இது தொடர்பில் கருத்துரைத்த அவர்,

சிங்களப் பேரினவாதம் தான் பெரும்பான்மையானது. முழுமையான பேரினவாத அரசியலை நோக்கி சென்று கொண்டிருக்கிறது.

ரணில் விக்ரமசிங்க பிரதமராகவில்லை என்றால் தேர்தல் நடத்தப்பட வேண்டும். எனினும் தேர்தல் நடத்தப்பட்டால் சிங்களப் பேரினவாதம் பெரும்பான்மையை பெற்றுக் கொள்ளும் வாய்ப்பு இருக்கிறது

மற்றொருபுறத்தில் அரசியலமைப்பை முழுமையான கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்வதற்கும், அதனை தக்க வைத்துக் கொள்வதற்கும் இராணுவத்தினரின் உதவியை கேட்கவேண்டிய கட்டாயமும் இருக்கிறது.

மிக மிக அண்மையில் இலங்கை அரசியலில் இராணுவம் பங்காற்ற வேண்டிய நிலைக்குல் சென்று கொண்டிருக்கிறது என்றார்.

அவரின் முழுமையான நேர்காணல்,