மைத்திரியின் தீர்மானத்திற்கு எதிராக உயர் நீதிமன்றம் வழங்கிய வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்பின் முழுவடிவம்!

Report Print Murali Murali in சிறப்பு

நாடாளுமன்றம் கலைக்கப்பட்டமைக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்டிருந்த அடிப்படை உரிமை மீறல் மனுக்கள் தொடர்பான உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு, 88 பக்கங்களில் அமைந்துள்ளது.

இந்த முழுமையான தீர்ப்பு, உயர் நீதிமன்றத்தால் இன்று பகிரங்கப்படுத்தப்பட்டது. பிரதம நீதியரசர் நளின் பெரேராவால் எழுதப்பட்ட தீர்ப்புக்கு, நீதியரசர்கள் ஐந்து பேர் கையெழுத்திட்டுள்ளனர்.

கடந்த ஒக்டோபர் 26ஆம் திகதி பிரதமர் பதவியிருந்து ரணில் விக்ரமசிங்வை நீக்கிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மகிந்த ராஜபக்சவை பிரதமராக நியமித்தார்.

இதனையடுத்து கொழும்பு அரசியலில் கொந்தளிப்பு ஏற்பட்டது. தொடர்ந்தும் ஏற்பட்ட அரசியல் நெருக்கடி காரணமாக நாடாளுமன்றத்தை கலைத்த ஜனாதிபதி பொது தேர்தலுக்கும் அழைப்பு விடுத்திருந்தர்.

இதனையடுத்து மைத்திரியின் தீர்மானத்திற்கு எதிராக உயர் நீதிமன்றில் 17 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

இந்த மனுக்கள் பிரதம நீதியரசர் நளின் பெரேரா தலைமையில் பிரியந்த ஜயவர்தன தலைமையிலான ஏழு பேர் கொண்ட நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் விசாரிக்கப்பட்டு வந்த நிலையில் நேற்றைய தினம் தீர்ப்பு வழங்கப்பட்டிருந்தது.

இந்த முழுமையான தீர்ப்பு, உயர் நீதிமன்றத்தால் இன்று பகிரங்கப்படுத்தப்பட்டது.

தீர்ப்பின் முழு வடிவத்தை பார்க்க இங்கே அழுத்தவும்

Latest Offers