புலம்பெயர் தமிழ் சிறுவர்களுக்காக ஐ.பி.சியின் மற்றமொரு பிரமாண்ட படைப்பு உதயமாகின்றது!

Report Print Murali Murali in சிறப்பு

புலம்பெயர் தமிழ் சிறுவர்களுக்காக ஐ.பி.சி தமிழின் மற்றுமொரு பிரமாண்ட படைப்பாக ஐ.பி.சி மழலை தொலைக்காட்சி உதயமாகின்றது.

உலகெங்கும் வாழும் ஈழத் தமிழ் குழந்தைகள் பாதுகாப்பான நம்பகமான ஊடகப்பரப்பில் பிரகாசிக்க வேண்டும் என்ற நோக்கில் ஐ.பி.சி மழலை தொலைக்காட்சி ஆரம்பிக்கப்படவிருக்கின்றது.

ஐ.பி.சி மழலைத் தொலைக்காட்சி ஆரம்ப விழா எதிர்வரும் 19ம் திகதி லண்டனில் மிகவும் பிரமாண்டமாக நடைபெற இருக்கின்றது.

தமிழ் மொழியினால் எங்களது எதிர்கால சந்ததியினர் ஒன்று சேர்ந்து ஊடக துறையில் புதுமை சேர்க்க முயல்வார்கள் என்ற நம்பிக்கையில் ஐ.பி.சி மழலை தொலைக்காட்சி ஆரம்பமாகின்றது.

எதிர்கால சந்ததியினரின் சக்தியை, ஆற்றலை, கற்பனையை, அறிவியலை, தேடலை தத்தம் புலம்பெயர் தேச மொழித் தேர்ச்சியோடும் தமிழ் மொழிநேசிப்போடும் ஊடகப்பரப்பில் பலப்படுத்த வேண்டும் என்பதே ஐ.பி.சி மழலை தொலைக்காட்சியின் எதிர்பார்ப்பாகும்.

சிறுவர்களின் உளவியலுக்கு ஏற்பவே சிறுவர்களுக்கான பலபடைப்புக்களை இத்தொலைக்காட்சியில் கொண்டுவர இருக்கின்றார்கள். சிறுவர்களுக்கான பல சுவாரசியமான நிகழ்ச்சிகளை ஐ.பி.சி மழலை தொலைக்காட்சியில் எதிர்பார்க்கலாம்.

எம் தமிழ் குழந்தைகள் தன்னினமாம் தமிழினத்தின் மீது பற்றுக்கொள்ளவும், தமிழ் இனத்தின் தனித்துவத்தை உணர்ந்துகொள்ளவும், தமிழ் மொழி வளர்ச்சியில் பங்குபற்றவும், ஊடகவியலாளராக தம்மை தரம் உயர்த்தவும் பெற்றோர்கள், பெரியோர்கள், கற்றவர்கள் கலைஞர்கள், ஊடகவியலாளர்கள் இலக்கியவாதிகள் என்ற அனைத்து தரப்பினரும் கரம் கொடுக்கவேண்டும் என ஐ.பி.சி மழலை தொலைக்காட்சி கோரிக்கை விடுக்கின்றது.