யாழ்ப்பாணம் முதல் திருகோணமலை வரையான பிரதேசங்கள் இருளில் மூழ்கும்!

Report Print Murali Murali in சிறப்பு

இந்த வருட இறுதியில் தென்படும் சூரிய கிரகணம் காரணமாக யாழ்ப்பாணம் முதல் திருகோணமலை வரையான பகுதிகள் இருளில் மூழ்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் சந்தன ஜெயரத்ன இதனைத் தெரிவித்துள்ளார். எதிர்வரும், டிசம்பர் 26ஆம் திகதியன்று முழுமையான சூரியக்கிரகணம் ஒன்று தென்படவுள்ளது.

யாழ்ப்பாணம் மற்றும் திருகோணமலை பகுதிகளில் இந்த கிரகணம் முழுமையாக தென்படவுள்ள நிலையில், அந்த பகுதிகள் இருளில் மூழ்கும் என பேராசிரியர் சந்தன ஜெயரத்ன தெரிவித்துள்ளார்.

இதேவேளை, எதிர்வரும் டிசம்பர் 26ஆம் திகதியுடன் சுனாமி அனர்த்தம் ஏற்பட்டு 15 ஆண்டுகள் ஆகின்ற நிலையில், இந்த சூரிய கிரகணம் தென்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Latest Offers