இலங்கையில் தனது பணியினை நிறைவு செய்த ஜமுனா

Report Print Jeslin Jeslin in சிறப்பு

இலங்கையின் கடல் எல்லையை வரைபடமாக்கும் ஒருங்கிணைந்த வேலைத்திட்டத்திற்கு இணைந்த இந்திய கடற்படைக்கு சொந்தமான ஜமுனா கப்பல் கொழும்பிலிருந்து காலி வரையான கடற்கரை ஆய்வுகளை நிறைவு செய்துள்ளது.

இதன்பின்னர் அந்த கப்பல் நேற்றைய தினம் காலி துறைமுகத்தில் நங்கூரமிடப்பட்டுள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது.

கடந்த வருடம் டிசம்பர் மாதம் முதல் இந்நாட்டின் கடல் எல்லையை வரைபடமாக்கும் ஒருங்கிணைந்த வேலைத்திட்டத்தில் குறித்த கப்பல் இணைந்து கொண்டது.

நேற்றைய தினம் காலி துறைமுகத்தில் நங்கூரமிடப்பட்டுள்ள இந்திய கடற்படைக்கு சொந்தமான ஜமுனா கப்பல், கடற்படையால் பாரம்பரியமாக வரவேற்கப்பட்டுள்ளது.

Latest Offers