அனுமதியின்றி இலங்கையில் இருந்து புறப்பட்டு சென்ற விமானம்!

Report Print Murali Murali in சிறப்பு

வெளிநாட்டு முதலீட்டாளர்கள் சிலரை ஏற்றிவந்த விமானம் ஒன்று அனுமதியின்றி நாட்டில் இருந்து புறப்பட்டு சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சீனா, சிங்கபூர் மற்றும் ஹொங்கொங் நாட்டு முதலீட்டாளர்களை ஏற்றிவந்த குறித்த விமானம் கடந்த மூன்றாம் திகதி கட்டுநாயக்க சர்வதேச விமானநிலையத்தை வந்தடைந்தது.

இதனையடுத்து விசேட அனுமதியுடன் குறித்த விமானம் திருகோணமலை சீனகுடா விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டது. பாதுகாப்பு அமைச்சின் விசேட அனுமதியுடனேயே குறித்த விமானம் தரையிறங்கியுள்ளது.

இந்நிலையில், குறித்த விமானம் நாட்டில் அனுமதி பெறாத விமான நிலையம் ஒன்றில் இருந்து நாட்டை விட்டு இன்று வெளியேறியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

நாட்டின் குடிவரவு - குடியகல்வு சட்டம், மற்றம் சிவில் வமான சேவைகள் சட்டத்திற்கு அமைய அனுமதி பெறாத விமானநிலையம் ஒன்றில் இருந்து விமானங்கள் நாட்டிலிருந்து வெளியேற முடியாது.

எனவே, குறித்த விமானம் உரிய நடைமுறைகளை பின்றி நாட்டில் இருந்து வெளியேறவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.

எவ்வாறாயினும், குடிவரவு - குடியகல்வு திணைக்களத்தினால் நாட்டில் இருந்து வெளியேறுவதற்கு கப்பல்களுக்கு வழங்கப்படும் அனுமதியை பெற்று இந்த விமானம் நாட்டிலிருந்து வெளியேறியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Latest Offers