இராவணனிடம் 24 ரக விமானங்கள்! இலங்கை வேந்தனின் திறமை

Report Print Steephen Steephen in சிறப்பு

இந்தியாவில் நடைபெற்ற பிரதான அறிவியல் மாநாடு ஒன்றில் இலங்கை வேந்தன் இராவணனிடம் இருந்த விமான பலம் குறித்து கலந்துரையாடப்பட்டுள்ளது.

இந்த அறிவியல் மாநாடு இந்திய பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்றுள்ளது.

இராவணனிடம் 24 ரகமான விமானங்கள் இருந்துள்ளதாக ஆந்திர பல்கலைக்கழக உபவேந்தர் ஜீ.நாகேஸ்வரராவ் தெரிவித்துள்ளார்.

இந்த விமானங்களை தரையிறக்க பல விமான ஓடு தளங்கள் இருந்தன எனவும் அவர் கூறியுள்ளார்.

இலங்கை வேந்தன் இராவணன், அறிவியல், மருத்துவம், இசை உட்பட 10இற்கும் மேற்பட்ட துறைகளில் திறமை பெற்றவராக விளங்கினார் என கூறப்படுகிறது.