ஜெர்மனியில் விடுதலைப் புலி உறுப்பினர் அதிரடியாக கைது! தகவலுக்காக காத்திருக்கும் இலங்கை தூதரகம்

Report Print Murali Murali in சிறப்பு

ஜெர்மனியில் கைது செய்யப்பட்டுள்ள விடுதலைப் புலிகள் அமைப்பின் உறுப்பினர் தொடர்பான தகவல்களுக்காக, காத்திருப்பதாக இலங்கை தூதரகம் அறிவித்துள்ளது.

தென்மேற்கு ஜெர்மனியில் கடந்த புதன்கிழமை 39 வயதுடைய நவநீதன் என்ற சந்தேக நபரைக்கைது செய்திருப்பதாக அந்நாட்டு பொலிஸார் தெரிவித்திருந்தனர்.

முன்னாள் அமைச்சர் லக்ஸ்மன் கதிர்காமர் கொலை மற்றும் டக்ளஸ் தேவானந்தா கொலை முயற்சி ஆகியவற்றுடன் தொடர்புடையவர் என்ற சந்தேகத்தின் பேரில் இவர் கைது செய்யப்பட்டிருந்தார்.

இந்நிலையில், கைது செய்யப்பட்டுள்ள நபர் தொடர்பாக, ஜெர்மனியின் உள்துறை அமைச்சின் தகவல்களுக்காக காத்திருப்பதாக, பெர்லினில் உள்ள இலங்கை தூதரகம் தெரிவித்துள்ளது.

ஜெர்மனி கோரிக்கை விடுத்தால், எத்தகைய விசாரணைக்கும் ஒத்துழைக்கவும், உதவவும், சிறிலங்கா தயாராக இருப்பதாக, ஜேர்மனிக்கான சிறிலங்காவின் தூதுவர் கருணாசேன ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும், இந்த விடயம் குறித்து கருத்து எதையும் வெளியிட கொழும்பில் உள்ள ஜெர்மனி தூதரகம் மறுப்புத் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.