சீனாவின் ஆதிக்கத்தினால் இலங்கையில் தமிழர்களுக்கு ஏற்பட்டுள்ள நிலை!

Report Print Dias Dias in சிறப்பு

பாகிஸ்தானில் சுயநிர்ணய உரிமைக்கு போராடும் பாலுச் மக்களினால் நடாத்தப்பட்ட மாநாட்டில் காஸ்மீர், சின்டி, தமிழீழ மக்களது சுயநிர்ணய உரிமை, மற்றும் மனித உரிமை நிலைமைகள் குறித்து ஆராயப்பட்டுள்ளது.

இது குறித்த மாநாடு பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் நேற்று இடம்பெற்றது. இந்த மாநாட்டை ‘பாலுச் மக்களின் சர்வதேசகுரல்’என்ற அமைப்பு ஒழுங்கு செய்திருந்தது.

“சீனா பாகிஸ்தானது பொருளாதார தாவாரம்” என்ற கருப்பொருளின் அடிப்படையில் நடைபெற்ற மாநாட்டில் பாலுச், காஸ்மீர், சின்டி, தமிழீழ பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.

இம்மாநாட்டில் முக்கிய பேச்சாளர்களாக, பிரான்ஸின் பல்கலைக்கழக பேராசிரியர்கள், புத்திஜீவிகள், சர்வதேச பிரதிநிதிகள் என பலரும் கலந்துகொண்டு கருத்துக்களை முன்வைத்திருந்தனர்.

பல தசாப்தங்களாக பாலுச் மக்களுடன் நட்பை பேணிவரும், பிரான்ஸை தளமாக கொண்டு இயங்கிவரும் தமிழர் மனிதர் உரிமைகள் மையத்தின் பொது செயலாளார், ச.வி. கிருபாகரன் இம்மாநாட்டில் கலந்துகொண்டார்.

இதன்போது உரையாற்றிய புத்திஜீவிகள், சீனாவின் அழுத்தங்கள், செல்வாக்குகள் மிகவும் மோசமாக இலங்கையை பாதித்துள்ளதாகவும், சீனா முழு உலகத்தையுமே தமதாக்கி கொள்வதற்கு முயற்சித்து வருவதாகவும் கருத்து தெரிவித்தனர்.

இம்மாநாட்டில கலந்துகொண்டிருந்த ச.வி.கிருபாகரன் கருத்து வெளியிடுகையில்,

“இலங்ககையில், 2009ம் ஆண்டிற்கு பின்னர் சீனாவின் செல்வாக்கு படிப்படியாக அதிகரித்து வருவதுடன், தமிழர்களது சுயநிர்ணய உரிமை போராட்டம் நாளுக்கு நாள் பின்தங்கி செல்வதற்கு சீனா போன்று சில நாடுகள் காரணமாக உள்ளதாக” கூறியுள்ளார்.