துபாயில் தனி சிறையில் அடைக்கப்பட்ட மாக்கந்துர மதுஷ்! தொலைபேசியிலிருந்து முக்கிய தகவல்கள் கசிவு?

Report Print Murali Murali in சிறப்பு
961Shares

பிரபல பாதாள உலக குழு தலைவர் மாக்கந்துர மதுஷ் மற்றும் அவரது சகாக்கள் துபாயில் தனித்தனி சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்நிலையில், கைது செய்யப்பட்டுள்ள மாக்கந்துர மதுஷிடம் இருந்து இரண்டு தொலைபேசிகளை துபாய் பொலிஸார் மீட்டுள்ளதாகவும், அவற்றுக்கு வந்துசென்ற அழைப்புக்களின் விபரங்களை ஆவணப்படுத்தியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இதனிடையே, இந்த கைது நடவடிக்கையில் இருந்து இறுதி நேரத்தில் தப்பிச் சென்றதாக சொல்லப்படும் அங்கொட லொக்காவை தேடி பொலிஸ் வலைவீசியுள்ளதாகவும் அறியமுடிகின்றது.

இதனிடையே மதுஷின் தொலைபேசிக்கு இலங்கையின் முக்கிய அரசியல் பிரமுகர்கள் மற்றும் முன்னணி வர்த்தகர்கள் பலருக்கு தொலைபேசி அழைப்பு எடுக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இது குறித்து மேலதிக விசாரணைகளை முன்னெடுக்க இலங்கை பாதுகாப்புத் தரப்பிடம் ஒப்படைக்க அந்நாட்டு பொலிஸ் முடிவுசெய்துள்ளதாகவும் அறியமுடிகின்றது. எனினும், இது குறித்த உறுதியான தகவல்கள் வெளியாகவில்லை.

இதேவேளை, பிரபல பாதாள உலகக் குழுத் தலைவர் மாகந்துரே மதுஷ் உள்ளிட்ட நான்கு பேர் துபாயில் வைத்து நேற்று கைது செய்யப்பட்டனர்.

இலங்கையில் அண்மைக்காலகமாக இடம்பெற்ற பல்வேறு பாரிய குற்றச் செயல்களுடன் மதுஷிற்கு நேரடித் தொடர்பு உண்டு எனக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில், மாகந்துரே மதூஷை இலங்கைக்கு அழைத்து வருவதற்கு பாதுகாப்பு அமைச்சும் வெளிவிவகார அமைச்சும் இணைந்து நடவடிக்கை எடுத்துள்ளதாக அறியமுடிகின்றது.

மாகந்துரே மதுஷயும் அவருடன் கைதுசெய்யப்பட்ட ஏனைய பாதாள உலகத்தவர்கள் உட்பட இலங்கையர்களையும் இலங்கைக்கு அழைத்து வந்து இங்கு வைத்து விசாரிக்க இராஜதந்திர ரீதியிலான நகர்வுகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.