துபாயில் கைது செய்யப்பட்டுள்ள மாகந்துரே மதூஷின் தற்போதைய நிலை!

Report Print Murali Murali in சிறப்பு

துபாயில் கைது செய்யப்பட்டுள்ள பாதாள உலக குழுவை சேர்ந்த மாகந்துரே மதூஷ், அல்ரபா பொலிஸ் கூண்டில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகத்தின் உயர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், மாகந்துரே மதூஷ் உள்ளிட்டவர்கள் தீவிர விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர்கள் கூறியுள்ளனர்.

மாகந்துரே மதூஷ் மற்றும் அவருடன் இணைந்து கைது செய்யப்பட்ட மேலும் சிலர் அபுதாபியில் இருந்து துபாய்க்கு அழைத்து வரப்பட்டு அல்ரபா வீதி பொலிஸ் கூண்டில் அடைக்கப்பட்டடுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, பாதாள உலக குழுவின் தலைவர் மாகந்துரே மதுஷ் உள்ளிட்ட குழுவினர் துபாய் நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேல் மாகாண ஆளுநர் அசாத் சாலி இதனை தெரிவித்துள்ளார். நீர்கொழும்பில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்விடயங்களைக் குறிப்பிட்டார்.

தொடர்ந்தும் கருத்து வெளியிட்டுள்ள அவர், “31 பேர் இன்று துபாய் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதாக தமக்கு தொலைபேசி அழைப்பொன்றின் மூலம் அறியக்கிடைத்தது.

இந்நிலையில், அஜித் அரங்க விக்ரமசூரிய என்ற பெயரிலேயே மாகந்துரே மதுஷ் துபாய்க்கு இலங்கையிலிருந்து தப்பிச்சென்றுள்ளதாக அசாத் சாலி மேலும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, பாதாள உலக குழுவின் தலைவரான மாகந்துரே மதுஷ் உள்ளிட்டவர்கள் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் துபாயில் வைத்து அந்நாட்டு பொலிஸாரினால் கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.