வாழ்த்து உங்களுக்கல்ல! மகிந்தவிற்கு அதிர்ச்சி கொடுத்த சந்திரிக்கா

Report Print Murali Murali in சிறப்பு

முன்னாள் ஜனாதிபதிகளான சந்திரிகா குமாரதுங்க மற்றும் மகிந்த ராஜபக்ச ஆகிய இருவரும் நேருக்கு நேர் சந்தித்து ஓரிரு வார்த்தைகள் பேசிக்கொண்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கொழும்பு அரசியலில் சந்திரிகா - மகிந்த ராஜபக்ச இருவரும் எதிரிகளாக இருந்து வருகின்றனர். கடந்த காலங்களில் இருவரும் ஒருவர் மீது ஒருவர் பரஸ்பர குற்றச்சாட்டுகளை முன்வைத்து வந்தனர்.

இதனால் இருவரும் நேரில் சந்தித்து பேசவதை தவிர்த்து வந்தனர். இந்நிலையில், இந்திய குடியரசு தினத்தை முன்னிட்டு கொழும்பில் ஒழுங்கு செய்யப்பட்டிருந்த நிகழ்வில் இருவரும் சந்தித்து கொண்டனர்.

கடந்த 26ஆம் திகதி இது குறித்த நிகழ்வுகள் இடம்பெற்றிருந்த போதிலும், சந்திரிக்கா - மகிந்த இருவரும் சந்தித்து பேசிக்கொண்டமை தொடர்பிலான செய்திகள் தற்போது வெளியாகியுள்ளன.

இந்த நிகழ்வின் போது இருவரையும் மங்கள விளக்கேற்றுவதற்கு இந்தியத் தூதுவர் அழைப்பு விடுத்திருந்தார். அந்த தருணத்தில் இருவரும் அருகருகே நின்றிருந்தனர்.

இதன்போது, மகிந்த ராஜபக்ச “ Madam எப்படி இருக்கிறீர்கள்?” என்று கேட்டுள்ளார். எனினும், சந்திரிகா குமாரதுங்க அதற்கு உடனடியாக பதிலளிக்கவில்லை.

சிறிது நேரம் கழிந்து மகிந்தவிடம் வாழ்த்துகள் என்று கூறிய சந்திரிக்கா “மன்னிக்கவும், இது உங்களுக்கு அல்ல, திருமணம் செய்து கொண்ட உங்களின் மகளுக்குத் தான்” என்று மகிந்தவிற்கு அதிர்ச்சி கொடுத்துள்ளார்.