மரண தண்டனையை நிறைவேற்ற தயாராகும் மைத்திரி! தூக்கிலிடுபவர் பதவிக்கு விண்ணப்பம் கோரியது அரசு

Report Print Murali Murali in சிறப்பு

விரைவில் மரண தண்டனை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என ஜனாதிபதி அறிவித்துள்ள நிலையில், அலுகோசு பதவிக்கு விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது.

அலுகோசு பதவிக்கு இருவரை நியமிப்பதற்கு சிறைச்சாலைகள் திணைக்களம் இன்று விண்ணப்பங்களைக் கோரியுள்ளது.

கடந்த வாரம் நாடாளுமன்றில் கருத்து வெளியிட்ட ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இரண்டு மாதங்களில் மரண தண்டனையை நிறைவேற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கவுள்ளதாக அறிவித்திருந்தார்.

அத்துடன், எவ்வித எதிர்ப்புகள் வந்தாலும், மரண் தண்டனையை அமுல்படுத்தவுள்ளதாக ஜனாதிபதி அறிவித்திருந்தார். இது குறித்து கடந்த ஆண்டு ஜனாதிபதி அறிக்கை ஒன்றையும் கோரியிருந்தார்.

இந்நிலையில், மரண தண்டனையை எதிர்நோக்கியுள்ள சில முக்கிய குற்றவாளிகளின் பெயர் அடங்கிய பட்டியல் ஒன்று சம்பந்தப்பட்டவர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக நீதி அமைச்சரும் அறிவித்திருந்தார்.

இந்த பின்னணியிலேயே, அலுகோசு பதவிக்கு விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது.

விண்ணப்பதாரிகள், க.பொ.த சாதாரண தரத் தேர்வில், இரண்டு திறமைச் சித்திகளுடன், ஆறு பாடங்களில் சித்திபெற்றிருப்பது அவசியம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், 45 வயதிற்கு குறைவானவராகவும், குற்றமிழைத்தவர்களுக்குத் தண்டனை நிறைவேற்றும் தற்துணிவு கொண்டவர்கள் இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க முடியும் என்றும் கூறப்பட்டுள்ளது.

இதேவேளை, குறித்த பதவிக்கு மூன்றாவது முறையாக விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது. இதற்கு முன்னர் இந்த பதவிக்கு நபர்கள் தெரிவு செய்யப்பட்டிருந்தாலும் அவர்கள் குறித்த பதவியிலிருந்து விலகிச் சென்றுள்ளனர்.

இதன் காரணமாக மீண்டும் விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.