தாயகம் வர முயற்சித்த பலர் கைது! பெருந்தொகை பணம் கொடுத்து ஏமாந்த பரிதாபம்

Report Print Murali Murali in சிறப்பு

சட்டவிரோதமான முறையில் இலங்கை வர முயற்சி செய்த இலங்கை அகதிகள் ஐந்து பேரை தமிழக சுங்கப்பிரிவினர் கைது செய்துள்ளனர்.

அத்துடன், இவர்களை இலங்கைக்கு அனுப்பி வைப்பதற்கு ஏற்பாடுகள் செய்திருந்த மேலும் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தமிழக ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவிக்கப்படுகின்றது.

ராமேஸ்வரம் - இரட்டைத் தாழை சவுக்குத் தோப்பு பகுதியில் வைத்து நேற்று இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்களை இலங்கைக்கு அனுப்பி வைப்பதற்கு முகவர்கள் 25 ஆயிரம் ரூபாய் பணம் பெற்றுக்கொண்டுள்ளதாகவும் ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இலங்கை வருவதற்கு படகுக்காக காத்திருந்த போதே 10 வயதான சிறுவன் உள்ளிட்ட ஐந்து அகதிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் கிளிநொச்சி பகுதியை சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்படுகின்றது.

சம்பவம் குறித்து தொடர்ந்தும் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தமிழக ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.