முதன்முறையாக இலங்கை பெண்களால் செலுத்தப்பட்ட விமானம்! சற்று முன்னர் வெற்றிகரமாக தரையிறக்கம்

Report Print Vethu Vethu in சிறப்பு
1049Shares

இலங்கையில் முதன்முறையாக பெண் விமானிகளினால் செலுத்தப்பட்ட ஸ்ரீலங்கன் விமானம் வெற்றிகரமாக தரையிறக்கியுள்ளது.

மகளிர் தினத்தை முன்னிட்டு ஸ்ரீலங்கன் விமான சேவையினால் இந்த நடவடிக்கை இன்று மேற்கொள்ளப்பட்டது.

முழுமையாக பெண் ஊழியர்களுடனான விமானம் கொழும்பில் இருந்து சிங்கப்பூர் நோக்கி தனது பயணத்தை ஆரம்பித்தது.

அதற்கமைய சற்று முன்னர் UL 306 என்ற விமானம் சிங்கப்பூரில் தரையிறங்கியுள்ளது.

பெண்களால் வழிநடத்தப்பட்ட ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானம்

பெண்களால் மாத்திரமே இயக்கப்பட்ட விமானத்தில் சிங்கப்பூர் சென்றதன் ஊடாக ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் இன்று பெண்கள் தினத்தை கொண்டாடியுள்ளது.

யூஎல்306 விமானம் இன்று விமானிகள் மற்றும் பணிப்பெண்கள் என்று பெண்களால் மாத்திரம் நிர்வகிக்கப்பட்டு 170 பயணிகளுடன் சிங்கப்பூரை சென்றடைந்தது.

சும்ரன் க்கும்மன் விமானியாக செயற்பட முதல்தர அலுவராக மனீசா நெம்புகே பணியாற்றினார். அவர்களுக்கு உதவியான மிரான் ரொட்ரிக்கோ செயற்பட்டார்.

இந்தநிலையில் லக்ச்மி சுமுது, ஒனேலா, சிராணி மற்றும் துஸ்மந்தி ஆகியோர் பணிப்பெண்களாக செயற்பட்டனர்.

மேலதிக தகவல்- அஜித்